ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் கொரோனா காரணமாக தாமதமாக வெளியிடப்படும் நிலை உருவாகியுள்ளது.
தெலுங்கில் பிரபல நட்சத்திரங்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஆகியோர் நடித்து ராஜமௌலியால் இயக்கப்படும் ஆர் ஆர் ஆர் சினிமா ரசிகர்களால் திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியிடப இருந்தது. மேலும் இத்திரைப்படத்தின் டீசர்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. மேலும் இந்த படத்தின் விளம்பரத்திற்காக பல கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படம் வெற்றி பெற திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் இந்தியாவில் கொரோனா சற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத் மாநில ஆட்சியர் அங்கு உள்ள தியேட்டர்களை பார்வையிட்டு வருகிறார். எனவே அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் ஆர் ஆர் ஆர் திரைப்படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன .எனவே ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.