ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை பார்த்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் செய்த காரியம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய திரையுலகில் பிரபல இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படமானது இன்று முதல் திரைக்கு வந்து இருக்கின்றது. இதுவரையில் படத்தை பார்த்தவர்கள் பாசிட்டிவான விமர்சனங்களையே தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தில் கதாநாயகனாக நடித்த ஜூனியர் என்.டி.ஆர் ஹைதராபாத்தில் இந்தபடத்தை பார்த்து விட்டு வெளியில் வந்த போது மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றார். மேலும் காரில் ஏறும்போது ரசிகர்களுக்கு வெற்றிக் கொடியை காட்டும்படி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.