ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு குத்து பாடலை ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டபோது இரண்டு முறை திரையில் ஒளிபரப்பாகிறது.
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் நடிப்பில் பிரமாண்டமாக நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்தப் படமானது பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை பெற்றிருந்த நிலையில் இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இரு காலகட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு வீரர்கள் ஒரே காலகட்டத்தில் இணைந்தால் எப்படி இருக்கும் என்ற கதை கருவை கொண்ட திரைப்படம்தான் ஆர் ஆர் ஆர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு குத்து பாடலானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே படம் ஓடிக் கொண்டிருக்கும் போது இந்த பாடல் இடம்பெறும் போது ரசிகர்கள் ஒன்ஸ்மோர் என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு திரையரங்கு உரிமையாளகளும் இரண்டு முறை திரையிட்டு இருக்கின்றார். இது போல பல திரையரங்குகளிலும் நடைபெற்றதாக ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.