ஆர்.ஆர்.ஆர் படம் திரையரங்கில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிபார்த்துக் கொண்டிருந்த நிலையில், இந்த படம் சென்ற மார்ச் 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்நிலையில் விநியோகம் செய்திருத்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு ஐதராபாத்தில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
இதில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி “நாட்டு நாட்டு” பாடலின் ஸ்டெப்பை போட்டு நடனமாடி உற்சாகமடைந்தார். இந்த வீடியோவானது அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.