நாம் தமிழர் கட்சி ஆர்.எஸ்.எஸ் உடைய தொங்கு சதையாக இன்றைக்கு எல்லோரையும் அச்சுறுத்துகிறது என வன்னியரசு விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக கட்சியின் முன்னணி நிர்வாகி வன்னியரசு, இங்கு இருக்கின்ற அமைப்புகள் ஒட்டுமொத்தமாக பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார அமைப்புகள் என தேசிய இனங்களுடைய அடையாளத்தை அழித்து ஒழிக்க முயற்சி செய்வதற்கு எதிராக… நம்முடைய இனத்தை பாதுகாப்பதற்கு போராடிக் கொண்டிருக்கிறோம். நாம் தமிழர் கட்சி பாரதீய ஜனதா கட்சியின் அனுசரணையாக, ஆர்.எஸ்.எஸ் உடைய தொங்கு சதையாக இன்றைக்கு எல்லோரையும் அச்சுறுத்துகிறது.
அவுங்க என்ன செய்கிறார்களோ ? அதேயே தான் இவர்கள் செய்கிறார்கள். கல்புர்கியை எதற்கு படுகொலை செய்கிறார்கள் ? இந்துத்துவத்திற்கு எதிராக, ஆர்எஸ்எஸ் எதிராக அவர் தொடர்ச்சியாக எழுதினார், அதற்காக அவர் படுகொலை செய்யப்பட்டார். அதே போல இவர்கள் இன்றைக்கு அதே வேலையை செய்கிறார்கள். துப்பாக்கி இல்ல, அவ்வளவு தான். மத்தபடி வார்த்தையால்… சுடும் வார்த்தையால் பேசுறாங்க.
நம்முடைய அண்ணன் சுப உதயகுமார் ஒரு வார்த்தை சொன்னதுக்கு, அவர் மேல அவ்வளவு தடதடன்னு எழுதுறாங்க. சொல்லிக் கொடுப்பதே வன்முறை, ஆபாசம். எதையுமே ஒரு நாகரீகமான அரசியலை அவர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை. அந்த அடிப்படையில்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். காவல்துறைக்கும் மெத்த பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும்.
அந்த ரவுடி கும்பல் மீது வழக்கு தொடுத்திருகிறோம். அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டு அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும். இதுதான் இந்த போராட்டத்தின் நோக்கம், கோரிக்கை. ஆகவே காவல்துறைக்கு இந்த கோரிக்கையை வைத்து போராட்டம் அடுத்தகட்ட போராட்டத்திற்கு போவதற்கு முன்பாக தமிழக அரசு, காவல்துறை இது மாதிரியான ரவுடி கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்குறேன் என வன்னியரசு கேட்டுக் கொண்டார்.