ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டிவிசிக கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதாவது, வரும் அக்.,2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சார்பில் தமிழகம் முழுதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும், ஆர்.எஸ்.எஸ் க்கு அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. அம்பேத்கரை மதம் சார்ந்த தலைவராக அவர்கள் நினைக்கிறார்கள், காந்தி கொலை செய்யப்பட்டபோது அதை கொண்டாடியவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என குற்றச்சாட்டுகளை கூறி, இதன் காரணமாக அவர்கள் அனைத்து ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று திருமாவளவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
எனவே அனுமதி வழங்க வேண்டும் என்றும், காவல்துறைக்கு உத்தரவிட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நேற்று மனு தாக்கல் செய்திருக்கிறார். நீதிமன்றம் கெடு முடிவதால் மனுவை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என நீதிபதி இளந்திரையன் முன்பு திருமாவளவன் தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி இளந்திரையன், பிரதான வழக்கில் திருமாவளவன் மனுதாரர், எதிர்மனுதாரராக இல்லாத போது மனுவை எப்படி விசாரிக்க முடியும்? என்றும், மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், மனு எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தினார்..