Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்”…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டை வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் எண்ணில் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அந்த மர்ம நபர் ஒரு வாட்ஸ் அப்பில் குழுவை அமைத்து அதில் சில செல்போன் எண்களை இணைத்திருக்கிறார். அதில் ஒரு எண் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு உரியது. அந்தக் குழுவில் தான் மர்ம நபர் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் பதிவு செய்து இருக்கிறார். அதாவது கர்நாடக மாநிலம், உத்தர பிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்கள் உட்பட 6 இடங்களில் இரவு 8 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கடந்த 4ஆம் தேதி பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை பார்த்த உத்தரப் பிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தினர் இது தொடர்பாக லக்னோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வாட்ஸ் அப்பில் பதிவிடப்பட்ட செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த செல்போன் எண் தமிழகத்தில் புதுக்கோட்டை அருகில் திருக்கோகர்ணம் பகுதியில் வசித்த 20 வயதுடைய ராஜ் முகமது என்பவருடைய எண் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து லக்னோவிலிருந்து காவல்துறையினர் நேற்று புதுக்கோட்டைக்கு வந்துள்ளனர். திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் உதவுயுடன் திருக்கோகர்ணத்தில் வைத்து ராஜ் முகமதுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் லக்னோ கூட்டிச்செல்ல அம்மாநில காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories

Tech |