Categories
மாநில செய்திகள்

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தடை… சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!!!

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலதிற்கு காவல்துறை தடை விதித்து இருக்கின்ற நிலையில் அதற்கு எதிராக ஆர் எஸ் எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கூறியதால் அக்டோபர் இரண்டாம் தேதி பொதுக்கூட்ட போராட்டம் நடத்தவும் எந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் காவல்துறையின் இந்த முடிவுக்கு எதிராக ஆர் எஸ் எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது இந்த மனு நாளை விசாரணைக்கு வருகின்றது. மேலும் காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என காவல்துறை சீராய்வு மனுதாக்கல் செய்திருக்கிறது.

Categories

Tech |