Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் அனுமதி மறுப்பு…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த பல இடங்களில் அனுமதி கோரி இருந்த நிலையில் அது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.அதாவது ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த 24 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.23 இடங்களில் உள் விளையாட்டு அரங்கில் ஊர்வலம் நடத்தலாம் என்றும் மூன்று இடங்களில் மட்டுமே பொது இடத்தில் ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் மேற்கூறிய விவரங்களை காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் பிறப்பிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |