Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை கோருவது துரதிஷ்டவசமானது…. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம்….!!!!

ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை விதிப்பது துரதிஷ்டவசமான செயல் என கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரான பசவராஜ் பொம்மை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாப்புலர் பிரண்ட் மீதான தடையை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்விக்குட்படுத்துகிறார். மேலும் சித்தராமையா முதலமைச்சராக  இருந்தபோது பாப்புலர் பிரண்ட் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இப்போது அதை மறைக்க ஆர்.எஸ். எஸ்-ஐ தடை செய்ய வேண்டுமா?. மேலும் ஆர்.எஸ். எஸ். என்பது தேசபக்தர்களின் அமைப்பு, ஏழைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநிலத்தில் தேசபக்தி பற்றிய புரிதலை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ளது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |