Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய…. 2 பேர் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை தாக்கிய 2 பேர் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான ரவிக்குமாரை கடந்த 6ஆம் தேதி 2 பேர் வழிமறித்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரவிக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி கம்பம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த வாசித், கம்பம் மெட்டு காலனியில் வசிக்கும் சதாம் உசேன் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட வாஜித் மற்றும் சதாம் உசேன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே மாட்ட ஆட்சியர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதனை பரிசீலித்த ஆட்சியர் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை கம்பம் காவல்துறையினர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |