Categories
மாநில செய்திகள்

“ஆர்.காமராஜின் எஃப்.ஐ.ஆர் விவரங்கள்”…. வருமானத்திற்கு அதிகமா சொத்து…. எவ்வளவு தெரியுமா?…..!!!!!

அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மன்னார்குடி ஆகிய ஊர்களில் 49 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் அதிகமான அதிகாரிகள் இச்சோதனையை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து தி.மு.க அரசு சோதனை நடத்துவதாக அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அ.இ.அ.தி.மு.க-வை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர் கொள்ள முடியாத விடியா தி.மு.க அரசு, முன்னாள் அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிந்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. அரசியல் பழி வாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டு மக்கள் பணிகளில் கவனம்செலுத்த வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத் துறை பதிவுசெய்த முதல் தகவலறிக்கையில் முக்கிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன், நண்பர்கள் சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி போன்ற 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனிடையில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை மகன்களின் நிறுவனத்தை நடத்தவும், NARC ஹோட்டல் சொத்துக்களை வாங்கி கட்டுமானம் செய்வதற்காகவும் பயன்படுத்தி இருக்கிறார்.

கடந்த 2015 ஆம் வருடத்தில் 1.39 கோடி ரூபாயாக இருந்த காமராஜ் மற்றும் அவரது மகன்களின் சொத்து மதிப்பு 2021 ஆம் ஆண்டில் 60.24 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பின் 2015 -2021 வரை காமராஜ் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய 6 பேரின் வருமானம் 12.99 கோடி ரூபாயாகவும், செலவு 12.59 கோடி ரூபாயாகவும் இருந்திருக்கிறது. வருமானம் செலவை தாண்டிப் பார்க்கும்போது 58.84 கோடி ரூபாய் மதிப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது தெரியவந்து உள்ளது.

Categories

Tech |