Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“ஆர்.கே.செல்வமணி வெற்றி பெறுவார்”… “நாய் கொலைக்குதுனு சிங்கம் குலைக்க முடியுமா…?” ராதாரவி காரசாரமாக பேச்சு…!!!

டப்பிங் யூனியன் பதவிப்பிரமாண விழாவில் ராதாரவி ஆர்.கே.செல்வமணி வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.

சினிமா துறையில் டப்பிங் யூனியன் தேர்தல் நடைபெற்றது. இதில் ராதாரவி தலைமையிலான அணி வெற்றி பெற்றிருக்கின்றது. இதனால் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டப்பிங் யூனியன் தலைவராக பதவியேற்றுள்ள ராதாரவி நன்றியுரை ஆற்றினார். பேசும்பொழுது தனக்கு எதிராக செயல்பட்டவர்களை விமர்சித்து பேசினார். அதில் அவர் உரையாற்றியதாவது, “இங்கு பெப்சி குடும்பத்தினர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. பெப்சி நிறுவனமானது நல்ல நிலைமையில் இருப்பதற்கு ஆர்.கே.செல்வமணி காரணமாவார். அவர் என்னிடம் பிரச்சனை வரும் பொழுது கூப்பிட்டு பேசுங்கள் என்றார்.

ஆனால் அது தவறு பிரச்சனை என்பது வந்தால் போய்விடும் அதை நாம் கண்டு கொள்ளக் கூடாது. என்னை எதிர்த்தவர்களால்தான் நான்  இந்தப் பதவிக்கு வந்துள்ளேன். ஆதலால் அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். நான் வளர்த்து விட்டவர்கள் எல்லாம் என்னை எதிர்த்து போட்டியிட்டனர். ஆனால் இன்று அவர்களுக்கு எல்லாம் டெபாசிட்டே இல்லை. டைரக்டர் யூனியனில் பிரச்சனை நடக்கின்றது. அப்போ இங்கேயும் நடக்குமா என்கிறார்கள். நாய் குலைக்குதுன்னு சிங்கம் குலைக்க முடியுமா.? இயக்குனர் சங்க தேர்தல் பற்றி நான் கேள்விப்பட்டேன். அதற்காக வருந்துகிறேன். கண்டிப்பாக ஆர்.கே.செல்வமணி வெற்றி பெறுவார். இங்கு வந்து வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி” என தனது உரையை முடித்தார்.

 

Categories

Tech |