ஆர்.சி.பி இன் கேப்டன் பொறுப்பை விராட் கோலி மீண்டும் ஏற்றுக்கொண்டால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் இன் 15 ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நடப்பு மாதத்தின் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளும் மிக சிறந்த வீரர்களை வாங்குவதற்கு திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையே ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்துள்ளார். இந்நிலையில் ராயல் சாலஞ்சர்ஸ் தற்போது நடைபெறவுள்ள மெகா ஏலத்திலிருக்கும் ஜேசன் ஹோல்டர், ஸ்ரேயஸ் ஐயர், டேவிட் வார்னர் போன்றவர்களிலிருந்து கட்டாயமாக ஒருவரை 10 கோடிக்கும் அதிகமான செலவில் வாங்கும் கட்டாயத்தில் உள்ளது.
ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் விராட் கோலிக்கு 15 கோடி கொடுத்து கேப்டன் பதவியில் தக்க வைத்துள்ளதால் மீண்டும் அவ்வளவு ரூபாயை ஏலத்தில் செலவு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் மூத்த வீரரான அஜித் அகார்கர் விராட் கோலி மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸின் கேப்டன் பதவியை ஏற்றால் மட்டுமே அந்த அணியின் பிரச்சனை அனைத்தும் தீரும் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசியதாவது, ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதல் 3 பேரை மட்டும் அதிக தொகை கொடுத்து வாங்கிவிடுகிறது. ஆனால் மிடில் வரிசையில் அதிக தொகை கொடுத்து நல்ல வீரர்களை வாங்க தயக்கம் காட்டுவதால் தான் அந்த அணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஆகையினால் இனிமேல் ராயல் சாலஞ்சர்ஸ் அந்த தவறை செய்யாது என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.