Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆர்.டி.ஒ கையொப்பத்தை பயன்படுத்தி…. நில அபகரிப்பு மோசடி…. அதிகாரிகள் தீவிர விசாரணை….!!

ஆர்.டி.ஒவின் டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்தி நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அதிகாரிகளின் உதவியோடு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி, பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷிப் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் நிலத்தையும், தாமரைக்குளம் பகுதியில் 56 ஏக்கர் நிலங்களையும் மீட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த இடங்களில் பதிவு செய்யபட்ட பட்டாக்களை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு துணையாக இருந்த பெரியகுளம் தாலுகாவில் பணியாற்றும் 2 தாசில்தார்கள், 2 துணை தாசில்தார்கள், 2 நில அளவையாளர்கள் என 7 பேரை ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆர்.டி.ஒ வின் கையொப்பத்தை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி நில ஆவணங்கள் மாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

எனவே நில மோசடி நடந்த சமயத்தில் பணிபுரிந்த ஆர்.டி.ஒ அதிகாரிகளிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் படி ஆர்.டி.ஒ ஜெயப்பிரிதா, ஆனந்தி ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் பெரியகுளம் ஆர்.டி.ஒ.வாக பணிபுரிந்தபோது அவர்கள் டிஜிட்டல் கையொப்பத்தையும், ஆர்.டி.ஒவுக்கான கடவுசொல்லையும் தவறான முறையில் பயன்படுத்தி நில ஆவணங்களை திருத்தம் செய்து மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் தென்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இந்த நில அபகரிப்பு மோசடியில் மேலும் பலரும் சிக்குவதர்க்கான வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |