ரசிகர் ஒருவரின் பரபரப்பான கேள்விக்கு யாஷிகா சிரித்தபடியே பதிலளித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் 2018ம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 5 லட்ச ரூபாய் பரிசையும் தட்டிச்சென்றுள்ளார். இவ்வாறு இருக்க கடந்தாண்டு யாஷிகா ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது நலமாக உள்ளார்.
இந்நிலையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வரும் யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர் பரபரப்பான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதாவது நீங்க ஒரு விர்ஜினா என்று கேட்டுள்ளார். இதற்கு சிரித்துக்கொண்டே நான் யாஷிகா என அந்த ரசிகரிடம் அவர் பதிலளித்துள்ளார். இப்படி ஒரு சர்ச்சையான கேள்விக்கு யாஷிகா சிரித்தபடியே பதிலளித்தது அனைவரிடத்திலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.