இன்று மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து 12வது ஆண்டு நினைவு நாள்.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மூலம் ஏற்படுத்திய காயம் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் ஆறாத வடுவாக உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலில் பற்றி எரிந்து தாஜ் ஓட்டல். நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஒரு ஆறாத ரணத்தை ஏற்படுத்திய தினம். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் 12 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மார்க்கமாக ஊடுருவி 3 நாட்கள் நடத்திய மிருகத் தனமான தாக்குதலில் ஒட்டுமொத்த தேசமே ஸ்தம்பித்துப் போனது.
அன்றைய தினம் இந்திய எல்லையில் கால் பதிப்பதற்கு முன்பே அவர்களின் கோரமுகம் வெளியிட்டது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கொலை உணர்வுடன் கொடிய ஆயுதங்களுடன் இந்தியாவை நோக்கி பயணத்தை தொடங்கினர். அவர்கள் வரும் வழியில் மீன் படகில் இருந்தவர்களை ஈவுஇரக்கமின்றி கொன்றனர். மேலும் அதே படகில் மும்பைக்கு வந்து சுற்றுலா பயணிகள் போல் மும்பை பகுதியில் குழுக்களாக பிரிந்து மும்பையின் அடையாளமாக விளங்கும் சி.எஸ்.எம்.டி, ரயில் நிலையம், ஓவராய் ரினஸ், ஹோட்டல் தாஜ், லியோபோல்ட் கபே, ஆஸ்பத்திரி, நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களில் கொடூரமாக தாக்குதல்களை நடத்தினர்.
இதில் பயங்கரவாதி அஜ்மல் கசாப் மற்றும் இஸ்லாமில் மும்பை சி.எஸ்.எம்.டி ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல் மிகவும் மோசமானது. ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அப்பாவி மக்களை, குழந்தைகளை, பெண்களை எந்த பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் சுட்டுத்தள்ளி ரத்த வெறியை தீர்த்துக் கொண்டன. 15 நிமிடங்களில் அவர் 38 பேரை கொன்று குவித்தனர். இடமெல்லாம் ரத்தக் காடாக மாறியது. இங்கு நடத்திய தாக்குதலில் 104 பேர் காயமடைந்தனர்.
லியோபர்டு கபேயில் 11 பேரும், ரிட்டன் ஓட்டலில் 30 பேரும், தாஜ் ஹோட்டலில் 31 பேரும், நரிமன் ஹவுஸ் 7 பேரும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 320 மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் போலீஸ் வாகனத்தில் கடத்தியும் தாக்குதல்களை ஏற்படுத்தினர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்லே தனது உயிரை கொடுத்து அஜ்மல் கசாப்பை உயிரோடு பிடிக்க உதவினார். மற்ற அனைத்து பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அஜ்மல் கசாப் கடந்த 2012ஆம் ஆண்டு புனே எரவாடா ஜெயிலில் தூக்கிலிடப்பட்டார். மேலும் இந்த சம்பவத்துக்கு மூளையாக விளங்கிய ஹபீஸ் சயீத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சமீபத்தில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. மும்பை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் முடிவடைந்தன. அது ஏற்படுத்திய காயம் மனித இனத்திற்கு இன்னும் ஆறாத வடுவாக உள்ளது. மும்பை மட்டுமின்றி உலகமெங்கும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற கூடாது என்பது அனைத்து மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.