வங்காளதேசத்தில் 6 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு வங்காள தேசத்தில் உள்ள டாக்காவின் சவர் பகுதியில் ஆறு மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 54 பேர் கோர்ட்டுக்கு வந்து நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சியங்களின் அடிப்படையில் டாக்கா 2 வது கூடுதல் சென்சஸ் கோர்ட் விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணை முடிவு பெற்ற நிலையில் நேற்று நீதிபதி இஸ்மத் ஜகான் தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் தொடர்புடைய 19 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் , முக்கியமான குற்றவாளிகளான 13 பேருக்கு தூக்கு தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.