திமுகவின் முன்னாள் பொருளாளருமான ஆற்காடு வீராசாமியை இறந்து விட்டதாக நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் அண்ணாமலை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணன் ஆற்காடு வீராசாமி இப்போது உயிரோடு இல்லை. இறைவனடி சேர்ந்துவிட்டார் என்று அண்ணாமலை பேசியுள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலங்களில் சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. கருணாநிதியின் நிழல் போல அவருடன் ஒன்றாக ஒரு காலத்தில் பயணித்தவர்.
இதனிடையே கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி வயது முதிர்வு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். பொது வாழ்விலிருந்து விலகி இருந்தாலும் உயிருடன் தான் இருக்கிறார். இந்த நிலையில் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது