Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆற்றின் குறுக்கே விழுந்த ராட்சதமரம்…. பாலமாக பயன்படுத்தி வரும் மக்கள்…. வெளியான புகைப்படம்….!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் தண்ணீர்வரத்து அதிகரித்தது. மேலும் ஆற்றில் வெள்ளம் குறையாததால் சோலை ஆறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் 9வது நாளாக சோலை ஆறு அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டிய நிலையில் இருக்கிறது. இதையடுத்து கேரளாவுக்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6,590 கன அடி வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து மின் நிலையம்-1 இயக்கப்பட்டு, சேடல்பாதை வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்கு 3,561 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோன்று மின் நிலையம்-2 இயக்கப்பட்டு, மதகுகள் வழியாகவும் 2,865 கனஅடி தண்ணீர் கேரளாவுக்கு வெளியேற்றப்படுகிறது. சென்ற 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக இப்போது எஸ்டேட்பகுதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரட்டுப்பாறை எஸ்டேட் பகுதியிலிருந்து அணலி எஸ்டேட் பகுதிக்கு போகும் சாலையின் குறுக்கேயுள்ள ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் அங்குள்ள தரைப் பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் செல்கிறது.

இதனால் அணலி எஸ்டேட் பகுதியிலுள்ள தொழிலாளர்கள், கிராமமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வால்பாறைக்கு செல்ல ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையில் மழையின் காரணமாக ராட்சதமரம் ஒன்று ஆற்றின் குறுக்கே விழுந்தது. தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் ஆற்றின்குறுக்கே விழுந்த மரத்தை பொதுமக்கள் பாலமாக பயன்படுத்துகின்றனர். எஸ்டேட் பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் ஆற்றின் குறுக்கே கிடக்கும் மரத்தின் மீது நடந்துசென்று வால்பாறைக்கு சென்று வருகின்றனர்.

Categories

Tech |