Categories
மாநில செய்திகள்

ஆற்றின் நடுவே சிக்கிய கல்லூரி பேருந்து…. ட்ராக்டர் மூலம் மீட்பு…. சேலத்தில் பரபரப்பு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிபட்டி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கருப்பூர், வெள்ளாளப்பட்டி, நாலுக்கால் பாலம் மற்றும் பண்ணப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து கருப்பூர் பகுதியில் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது ஏற்காட்டில் இருந்து ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சரபங்கா ஆற்றில் சிக்கியது. ஆற்றைக் கடப்பதற்கான ஓட்டுனர் அந்த வழியாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி மலைத் தொடரில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஏற்காட்டில் இருந்து உருவாகிவரும் சரபங்கா ஆற்றில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதில் சர்க்கரை செட்டியபட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரி நிரம்பியுள்ளது. இதனைப் பற்றி அறியாத ஓட்டுனர் ஆற்று வழியாக பேருந்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாதி அளவு பேருந்து தண்ணீரில் மூழ்கியது. அப்போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து தண்ணீரில் சிறிது நேரம் இழுத்துச் செல்லப்பட்டு இயக்க முடியாமல் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தவித்துக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரை பத்திரமாக மீட்டுனர். அதன் பிறகு அருகிலிருந்த டிராக்டர் வாகனத்தின் மூலம் ரோப் கயிறு கட்டி பேருந்தை  பத்திரமாக வெள்ளத்தில் இருந்து மீட்டனர். மேலும் கல்லூரிப் பேருந்தில் விழாவிற்காக மாணவ மாணவிகள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |