Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் பலி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த மந்தூரஹந்தி என்பவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும், 2 வயதில் அரவிந்த் என்ற மகனும் இருக்கின்றனர். பல வருடங்களுக்கு முன்பே மந்தூரஹந்தி தன் குடும்பத்துடன் கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சேக்கல்முடி எஸ்டேட்டில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து சென்ற 2 வருடங்களுக்கு முன் மந்தூரஹந்தி வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி தேயிலை தோட்ட பணியை செய்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சிறுவன் அரவிந்த் வீட்டின் முன் உள்ள ஆற்றின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனை திடீரென்று காணவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மந்தூரஹந்தி, தன் மகனை அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தார். எனினும் சிறுவனை காணவில்லை. இதனிடையில் அங்கு இருந்த சிலர் ஆற்றில் இறங்கி தேடினர்.

அதன்பின் நீண்ட தூரத்தில் உயிரிழந்த நிலையில், ஆற்றோர செடியில் சிக்கியபடி சிறுவனின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் அழுது துடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |