பீகார் மாநிலத்தில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென நீரில் கவிழ்ந்ததால் 100க்கும் மேற்பட்ட தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.
பீகார் மாநிலத்தில் பாகல்பூர் என்ற மாவட்டத்தில் நவுகாட்சியார் பகுதியில் இருக்கின்ற கங்கை ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் படகில் 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது படகு திடீரென நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் சென்ற அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அனைவரும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது வரை 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஆற்றில் விழுந்த மற்றவர்களின் நிலை என்ன என்று தற்போது வரை தெரியவில்லை. மீட்பு பணி மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.