ஆற்றில் கிடந்த விநாயகர் சிலையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பட்டி கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் செம்பு உலோகத்தாலான விநாயகர் சிலை கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆற்றில் கிடந்த 1 1/2 கிலோ எடையும், 1 1/4 அடி உயரமும் உடைய விநாயகர் சிலையை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் யாரேனும் சிலையை திருடி வந்து வைகை ஆற்றில் போட்டு சென்றனரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.