ஆற்றில் கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணல்திட்டு பகுதியில் காவிரி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் நெல்லிநகர் பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பதும், வீட்டில் கோபித்து கொண்டு வெளியே வந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.