Categories
உலக செய்திகள்

ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட…. பெண் யார்…? அதிர்ச்சியில் காவல்துறையினர்…!!

ஆற்றிலிருந்து 2 சடலங்கள் தேடுதல் குழுவினரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஆஸ்திரேலியாவில் உள்ள blue mountain என்ற பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் கடந்த சனிக்கிழமை அன்று தேடல் குழு மூலம் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அப்போது இறந்தவர்களில் ஒரு பெண் நியூ சவுத் வேல்ஸ் சீனியர் கான்ஸ்டபிள் கெல்லி போஸ்டர் என்பதை அறிந்ததும் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சடலமாக மீட்கப்பட்டுள்ள மற்றொரு பெண் ஆஸ்திரேலியாவில் உள்ள சிஸ்விக் என்ற நகரத்தில் படித்து வரும் சீன நாட்டைச் சேர்ந்த மாணவி என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் எட்டு பேர் கொண்ட குழுவினருடன் மவுண்ட் வில்சன் என்ற பகுதிக்கு சாகசங்கள் நிறைந்த canyoning tour காக வந்துள்ளனர். அப்போது பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் சீன மாணவியான இளம்பெண் நீரில் தவறி விழுந்துள்ளார். அப்போது கெல்லி போஸ்டர் அவரை காப்பாற்றுவதற்காக நீரில் குதித்துள்ளார். ஆனால் வெள்ளோட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் இருவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

பின்பு நீர் சுழற்சியில் சிக்கியவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொலைதூரத்தில் இருந்ததால் அவர்களால்  உடனடியாக உதவ முடியவில்லை. இதனால் இவர்களின் சடலம் ஒரு நாள் கழித்து தான் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கெல்லி போஸ்டர் கடந்த 2014ஆம் வருடம் வரை மாநில புலனாய்வு துறையில் உளவுத்துறை ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். மேலும் அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டதால் அந்த பணியில் இருந்து விலகியதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |