Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…. 5 மாடுகளுடன் சிக்கி தவித்த முதியவர்…. பொதுமக்களின் செயல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் தண்டபாணி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 5 மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நல்லூர் மணிமுத்தா ஆற்றை மாடுகளுடன் கடக்க முயன்ற போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்டபாணி ஆற்றின் நடவே இருக்கும் மணல் திட்டில் மாடுகளுடன் சிக்கிக்கொண்டு என்ன செய்வது என அறியாமல் இருந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் கயிறு கட்டி தண்டபாணியையும், 5 மாடுகளையும் பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, மணிமுத்தா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் ஆற்றை ஒட்டி இருக்கும் கிராம மக்களுக்கு நல்லூர் ஊரக வளர்ச்சி துறை மற்றும் வேப்பூர் வருவாய்த்துறை சார்பில் முன்னெச்சரிக்கை செய்வது வழக்கம். ஆனால் நேற்று அணை திறப்பது மற்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளனர்.

Categories

Tech |