Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் பிணமாக ஆண்…. இதுதான் காரணமா?…. போலீசார் தீவிர விசாரணை….!!!

கடலூர் கெடிலம் ஆற்றில் அண்ணா பாலத்திற்கு கீழே ஆண் ஒருவர் நேற்று காலை பிணமாக மிதந்துள்ளார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடலூர் புதுநகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மிதந்தவரின் உடலை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர். இதனை ஏராளமான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இறந்த நபர் குறித்த விசாரணை போலீசார் நடத்தினர். இந்த விசாரணையில், அவர் புதுப்பாளையம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் ராஜேஷ் என்கின்ற சண்முகசுந்தரம்(42) என்று தெரியவந்தது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது நண்பர் ராஜா என்கின்ற நாராயண மூர்த்தியே கொலை செய்த வழக்கில் கடத்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருந்தார். அந்த வழக்கு இரண்டு நாட்களில் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் ராஜேஷ் கெடிலம் ஆற்றில் பிணமாக மிதந்துள்ளார. எனவே அவரை யாரேனும் பழிக்கு பழி வாங்க கொலை செய்தார்களா? அல்லது கால் தவறி ஆற்றில் விழுந்து இறந்தாரா? என்பதை குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |