Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து…. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி…. இந்திய பிரதமர் அறிவிப்பு….!!!!

மத்தியபிரதேசத்தின் இந்தூர் நகரிலிருந்து மராட்டியம் மாநிலம் புனேநகர் நோக்கி மராட்டியஅரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 55 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து மத்தியபிரதேசம் தார் மாவட்டம் கல்கோட்டிலுள்ள நர்மதை ஆற்று பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத வகையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 100 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஆற்றில் மூழ்கி 13 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என் எண்ணங்கள் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் இருக்கிறது.

தற்போது மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இவ்விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார். அந்த வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |