Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்து வந்த குடம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து 3 உண்டியல்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி கிராமத்தில் இளங்காச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பொன்னாற்று பாசன வாய்க்காலில் மிதந்து வந்த ஒரு குடத்தை பொதுமக்கள் எடுத்து பார்த்துள்ளனர். அதில் இளங்காச்சியம்மன் கோவில் உண்டியல் என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 உண்டியலை திருடி சென்றது தெரியவந்துள்ளது. அதில் ஒரு உண்டியல் ஆற்றில் மிதந்து வந்துள்ளது. மற்ற 2 உண்டியல்களை மர்ம நபர்கள் எங்கு வீசி சென்றனர் என்பது தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |