நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே அரசல் ஆற்றில் 65 வயதான மூதாட்டி ஒருவர் ஆற்றில் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து மூதாட்டியின் உடலை ஆற்றிலிருந்து மீட்டெடுத்து பிரேத பரிசோதனைகாக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலையா கொலையா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.