Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆற்றில் மிதந்த பிணம்…. ராணுவ வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வைகை ஆற்றில் விழுந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள வசந்தபுரம் பகுதியில் தர்மேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தர்மேந்திரன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இதற்கிடையே பரமக்குடி அருகே உள்ள தெளித்தநல்லூர் வைகை ஆற்றுப்பகுதியில் புதருக்குள் ஆண் ஒருவரின் பிணம் கிடப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி உயிரிழந்த நபரின் உடலை மீட்டுள்ளனர். இதனைஅடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது 2 நாட்கள் முன்பு மாயமான தர்மேந்திரன் என தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் தர்மேந்திரன் வைகை ஆற்று தடுப்பணை வழியாக செல்லும் போது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |