Categories
மாநில செய்திகள்

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்… படகு கவிழ்ந்து 3 பேர் மாயம்…!!

கேரளாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கொச்சியில் இருக்கின்ற ஆற்றில் மீன் பிடிப்பதற்காக எர்ணாகுளம் அருகே உள்ள முலவுகாடு பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் 2 நாட்டுப்படகுகளின் மூலமாக மீன்பிடிக்க சென்றிருக்கின்றனர். இந்நிலையில் கன மழை மற்றும் அதிவேக காற்று ஏற்பட்டதால் இரண்டு நாட்டுப் படகுகளும் இன்று காலை 2 மணியளவில் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஒரு மீனவர் நீந்தி வந்து கரை சேர்ந்த நிலையில், மாயமாகிய மூன்று மீனவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு அணைகளின் கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.அதனால் கேரளத்தில் இருக்கின்ற முவாட்டுபுழா, தொடுபுழா, காளியாறு மற்றும் கொத்தமங்கலம் ஆகிய ஆறுகளில் அதிக அளவு நீர் பெருக்கெடுத்து வெள்ளம்போல் ஓடுகிறது. அதனால் மீனவர்களைத் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |