Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா குளிச்சிட்டு இருந்தோம்…. ஆற்றில் மூழ்கி பலியான சிறுவன்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் குபேந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இனியவன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் அதேப் பகுதியை சேர்ந்த ஹரீஷ் மற்றும் இனியவன் இருவரும் அப்பகுதியிலுள்ள சரபங்கா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இருவரும் ஆழத்திற்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆற்றில் இருந்தவர்கள் அவர்களை  மீட்டு அருகிலுள்ள  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் இன்றி இனியவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து  ஹரிஷ் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |