Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் விழுந்த பேருந்து!…. 7 ITBP வீரர்கள் பரிதாப பலி….. வெளியான தகவல்….!!!!

ஜம்முகாஷ்மீர் மாநிலம் பஹல்காமிலுள்ள சந்தன்வாரி அருகில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையினர் சென்ற வாகனம் இன்று விபத்துக்குள்ளானதில் 7 இராணுவ வீரர்கள் இறந்தனர். பிரிஸ்லான் என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலையில் கவிழ்ந்து ஆற்றங்கரையில் விழுந்ததில் சுமார் 30 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதாவது அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட ITBP இராணுவ வீரர்கள் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, இச்சம்பவம் நடந்துள்ளது. 37 ஐடிபிபி (ITBP) பணியாளர்கள் மற்றும் 2 போலீஸ்காரர்களுடன் சென்ற பேருந்து சந்தன்வாடி மற்றும் பஹல்காம் இடையேயுள்ள ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவத்தை அறிந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தினார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டில் “ஜே & கே பஹல்காம் பகுதியில் 39 ITBP பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததைக் கேள்விப்பட்டதில் இருந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆகவே காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடையவும், வீர மரணம் அடைந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திப்பதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.  இதையடுத்து “ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான விபத்தில் ITBP பணியாளர்களின் விலைமதிப்பற்ற உயிர்களின் துயரமான இழப்பு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்” என ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நடந்த உடனே ITBP PRO தரப்பிலிருந்து “எங்கள் ஆறு ஜவான்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இதில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிப்போம். ITBP தலைமையகமானது நிலைமையை கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையில் படுகாயங்களுடன் 8 ஜவான்கள் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் வாயிலாக ஸ்ரீநகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அனந்த்நாக்கிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காஷ்மீர் மண்டல ITBP DG எஸ்.எல் தாஸன் தெரிவித்தார். மேலும் இறந்தவர்களை மீட்க எல்லைப் பாதுகாப்புப் படையின் ஹெலிகாப்டர் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |