Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆடு, மாடுகளுடன் சிக்கி கொண்ட 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆடு, மாடுகளுடன் 3 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொல்லைகாது பகுதியில் சின்னசாமி(48)- கௌரம்மாள்(45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குமார்(30) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னச்சாமி அவரது மனைவி, மகன் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி(33) ஆகியோர் 10 ஆடுகள், 7 கரவை மாடுகளுடன் தொல்லைகாது ஆற்றி நடுவே இருக்கும் காலி நிலத்திற்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நான்கு பேரும் ஆடு, மாடுகளுடன் வெளியே வர முடியாமல் ஆற்றிற்கு மறுபுறம் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி குமாரை பத்திரமாக மீட்டனர். பின்னர் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் மற்ற மூன்று பேரையும், ஆடு மாடுகளையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது சின்னச்சாமி மற்றும் இரண்டு பெண்கள் தங்களது உணவு மட்டும் தாருங்கள் வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு நாங்கள் வருகிறோம் என கூறியதால் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |