Categories
உலக செய்திகள்

ஆற்றில் 10 மாதங்கள் கிடந்த ஐபோன்…. உரிமையாளருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி…. இதோ சுவாரசியமான சம்பவம்….!!!!

10 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் தொலைத்த ஐபோனை கண்டெடுத்தபோது, அந்த ஐபோன் வழக்கம்போன் வேலை செய்ததால் அதன் உரிமையாளர் ஆச்சரியம் அடைந்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த ஓவைன் டேவிஸ் என்பவர் தன் ஐபோனை ஆகஸ்ட் 2021ல் இளங்கலை விருந்தின்போது சின்டர்ஃபோர்ட் அருகேயுள்ள வை நதியில் தொலைத்தார். இதையடுத்து தேடிப்பார்த்தும் அவரால் ஐபோனை திரும்பக் கண்டுபிடிக்க முடியாமல் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின் ஏறக்குறைய 10 மாதங்களுக்குப் பின் அதே ஆற்றில் தன் குடும்பத்துடன் மிகுவல் பச்சேகோ என்பவர் படகில் பயணம் மேற்கொள்ளும்போது, டேவிஸின் ஐபோனை பார்த்தார். பின் ஆற்றிலிருந்து காணாமல்போன அந்த ஐபோனை எடுத்தார்.

போன் ரீஸ்டார்ட் ஆகாது என தெரிந்து இருந்தும், அதில் சென்டிமென்ட் விஷயங்கள் இருந்திருக்கலாம் என நினைத்ததால், போனை உலர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும் அவர் சாதனத்தை இயக்கியபோது அவருடைய கண்கள் பார்த்ததை அவரால் நம்பமுடியவில்லை. ஏனெனில் ஃபோன் சார்ஜரிலிருந்து மின்சாரத்தை பெற்று சார்ஜ் ஆக தொடங்கியது. அத்துடன் அவர் அதை இயக்கியபோது, வால்பேப்பராக ஆகஸ்ட் 13 தேதியுடன் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் ஸ்கிரீன்சேவரை பார்த்தார் . காணாமல்போன ஐபோன் பற்றி அந்த புகைப்படத்துடன் மிகுவல் பச்சேகோ முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அப்பதிவு 4000 முறை பகிரப்பட்டது.

ஆனால் ஐபோனை தொலைத்த டேவிஸ் சமூகஊடகங்களில் இல்லை. இருந்தாலும் அவரது நண்பர்கள், தொலைபேசியை அடையாளம் கண்டு பச்சேகோவுடன் தொடர்புகொள்ள டேவிஸுக்கு உதவினார்கள். அதனை தொடர்ந்து ஆற்றில் விழுந்த தன் ஐபோனை 10 மாதங்களுக்கு பிறகு வழக்கம்போல வேலை செய்யும் நிலையில் டேவிஸ் பெற்றுக் கொண்டார். அண்மையில் வெளியிடப்பட்ட ஐபோன்கள் அனைத்தும் IP68 மதிப்பீட்டில் இருக்கின்றன. அந்த வகையில் 1.5 மீட்டர் ஆழத்தில் சுத்தமான தண்ணீரில் 30 நிமிடங்களுக்கு ஐபோன்கள் உயிர்வாழ முடியும். எனினும் 10 மாதங்கள் தாக்கு பிடித்தது என்பது ஒரு அதிசயமாகவே இருக்கிறது.

Categories

Tech |