தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நாளாந்தெத்து கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளியான பாலகிருஷ்ணன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் அப்பகுதியில் இருக்கும் வெள்ளாற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தண்ணீரில் நீந்திய படியே மது கரையில் இருக்கும் ஆயிப்பேட்டை கிராமத்திற்கு செல்ல முயன்ற போது தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டதால் பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பாலகிருஷ்ணனின் உடலை மீட்டனர். பிறகு தொழிலாளியின் உடல் அரச மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.