Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும்” தலைகீழாக நின்று போராடிய வாலிபர்…. மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை….!!!!!

ஆற்றில்  தலைகீழாக நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறான வீரசோழன் என்ற ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த  ஆற்றில்  குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் பொதுமக்கள் கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில  நாட்களில் மேட்டூர் அணையில் இருந்து சோழன் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என கூறி இலுப்பூர் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவர் ஆட்சியின் உள் பகுதியில் தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவ்வழியாக ஆய்வு செய்ய  வந்த  மாவட்ட ஆட்சியர் லலிதா பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  கதிரவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கதிரவன் போராட்டத்தை கை விட்டார். மேலும் சோர்வாக இருந்த கதிரவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |