Categories
தேசிய செய்திகள்

ஆலமரத்திற்கு ரூ.2 கோடி நிதி வழங்கிய எம்பி…. எதற்காக தெரியுமா…..?

தெலுங்கானா மகபூகப்நகரில் 80 ஆண்டுகள் பழமையான ஆலமரம் பிள்ளாலமரி  ஒன்று உள்ளது. இந்த ஆலமரம் ஆசியாவிலேயே 2 வது பெரிய மரமாக உள்ளது. இந்த மரத்தை பாதுகாப்பதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரிய சாமிதி கட்சியின் ராஜ்யசபா எம்பி ஜோகினப்பள்ளி சந்தோஷ் குமார் ரூ.2 கோடி நிதி அறிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், இந்த மரம் அழியும் நிலையில் இருந்தது. ஆனால் தற்போது பசுமையாக செழித்து வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மரத்தைப் பாதுகாப்பது மக்களின் பொறுப்பாகும்.

இந்த ஆலமரத்தை பாதுகாக்க உப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மரத்தின் அனைத்து வேர்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கு மொழியில் பிள்ளாலு என்றால் குழந்தைகள், மரி என்றால் ஆலமரம் என்பது பொருள். மரத்தடியில் ஒரு முஸ்லீம் துறவியின் கல்லறை உள்ளது. ஒரு மினி உயிரியல் பூங்கா மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகம் அருகில் உள்ளது.

Categories

Tech |