பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு இறந்தவர்களுக்கு ஜி .கே வாசன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே வாசன் கூறுகையில் , “மதுரை மாவட்டம் செங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது அங்குள்ள தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் அதில் 7 பெண்கள் தீயில் உடல் கருகி இறந்துள்ளனர் அதோடு 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது .
இனி வரும் காலங்களில் இது மாதிரியான விபத்துகளை தடுப்பதற்கு அரசின் முறையான ஆய்வுகளும் ,ஆலை நிர்வாகத்தின் பாதுகாப்பு ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மட்டுமே நிரந்தர தீர்வாகும் . விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அதோடு காயமுற்று சிகிச்சை பெற்றுவருபவர்களின் உடல் நலன் வேண்டியும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் .