சேலம் மாவட்டத்தில் புறநகர் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து ஓமலூரிலுள்ள அ.தி.மு.க புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்க்கு சென்றள்ளார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் அவரை வாழ்த்தி கோஷமிட்டு வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளருக்கு வாக்கு எண்ணப்படும் நாளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார். மேலும் கொரோனா தொற்று காலத்தில் அனைவரும் முககவசம் மற்றும் கையுறை அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்று கூட்டத்தில் ஆலோசனை வழங்கியுள்ளார்.