புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் கேட்டறிந்துள்ளார்.
அவர் மாவட்டத்திலுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை, சிகிச்சை மையங்கள், காய்ச்சல் பரிசோதனை முகாம்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு, சிகிச்சைக்குரிய படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் என அனைத்தையும் கூறினார். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் கலெக்டருக்கு உரிய ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சப் கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.