வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடவேற்குடி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் சிவபாலன் என்பவர் தனக்கு தெரிந்த ஒருவரின் திருமணத்திற்கு போட்டோ எடுக்கும்படி கூறியுள்ளார். இதனை கேட்ட மகேந்திரன் திருமண விழாவை போட்டோ எடுத்துள்ளார். அதன் பிறகு ஆல்பம் தயார் செய்வதற்காக 70 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் திருமண வீட்டுக்காரர்கள் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே முன்பணமாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று மகேந்திரனின் கடைக்கு சிவபாலன் திருமண ஆல்பம் கேட்டு வந்துள்ளார்.
அப்போது மகேந்திரன் மீதி 60 ஆயிரத்தை தந்தால் மட்டும்தான் ஆல்பம் தயார் செய்ய முடியும் என கூறியுள்ளார். அதற்கு சிவபாலன் முதலில் ஆல்பத்தை தருமாறும், மீதி பணத்தை பின்னர் வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். ஆனால் மகேந்திரன் ஆல்பத்தை கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன் மகேந்திரனிடம் தகராறு செய்துவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் மகேந்திரன் திட்டச்சேரி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளுடன் நின்றுள்ளார்.
அப்போது அங்கு சிவபாலன் தனது நண்பர்களான சிலம்பரசன், நவீன் குமார், அருண் பிரபு ஆகிய 4 பேருடன் வந்து மகேந்திரனிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மகேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிவபாலன் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.