பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக ரன்பீர் கபூர் வலம் வருகிறார். இவர் நடிகை ஆல்யா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஆலியா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் ஆகியோர் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தனர். அப்போது ரன்பீர் கபூரிடம் உங்கள் மனைவியிடம் நீங்கள் சகித்துக் கொள்ளும் விஷயம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆலியா தூங்க ஆரம்பித்தால் நேராக படுக்க மாட்டார். தலை ஒரு பக்கம் கால் ஒரு பக்கமாக இருக்கும். நான் ஒரு ஓரமாக வந்து விடுவேன். அவருடன் சேர்ந்து தூங்குவது ரொம்ப கஷ்டம் என்று கூறினார்.
இதனையடுத்து ஆல்யாவிடமும் உங்கள் கணவரிடம் சகித்துக் கொள்ளும் விஷயம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆல்யா எனக்கு அவரிடம் பிடித்தது அவருடைய அமைதிதான். என்ன சொன்னாலும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பார். அதேசமயம் சில நேரங்களில் பேச வேண்டும் என்று நினைத்தால் கூட பேச மாட்டார். இதுதான் அவரிடம் சகித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்று கூறினார். மேலும் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் சேர்ந்து நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.