Categories
பேட்மிண்டன் விளையாட்டு

“ஆல் இங்கிலாந்து பேட்மின்டன்” சாம்பியனை வீழ்த்திய இந்திய வீரர்…. இறுதிப்போட்டிக்கு தேர்வு….!!

ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் போட்டியில் மலேசியாவை சேர்ந்த நடப்பு சாம்பியனை வீழ்த்தி இந்திய வீரர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.  இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென்  தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து வருகிறார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் லக்சயா சென், மலேசியாவின் நடப்பு  சாம்பியனான லீக்  ஜியாவுடன் போட்டியிட்டார்.

இந்த ஆட்டம் விறுவிறுப்பான நிலையில் நடைபெற்றதோடு  முதல் செட்டை லக்சயா சென் 21-13 என கைப்பற்றினார். அதே போல் அடுத்த செட்டில் பதிலடி கொடுத்த மலேசிய வீரர், அந்த செட்டை 21-12 என கைப்பற்றினார். இதனால் வெற்றியை உறுதி செய்யும் மூன்றாம் செட் ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் லக்சயா சென் 21-19 என அந்த செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனால் ஆல் இங்கிலாந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும்  லக்சயா சென் பெற்றார்.

Categories

Tech |