தமிழக மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆள போகிறது நேர்மை. மீள போகிறது தமிழகம்.. மாபெரும் மாற்றத்திற்கு தயாராகி விட்ட எம் தமிழர் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதுயுகம்பிறக்கிறது. பத்தாண்டுதுயர்போக்கும்_புத்தாண்டு” என்று கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.