ஆளி விதை நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பயிறாகும். கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிடைத்தாலும் இந்தியாவை பொறுத்தவரை பீகார், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இவை பயிரிடப்படுகின்றன. ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துபவர்கள் நிச்சயம் ஆளி விதையை தினசரி சேர்த்துகொள்வார்கள். ஆளி விதையில் இருக்கக்கூடிய நிறைய ஊட்டச்சத்துக்களின் காரணமாக இன்றைய மருத்துவ ஆய்வாளர்கள் அதனை அதிகம் பரிந்துரைக்கின்றனர்.
தானிய வகைகளில் சிறந்த ஆளி விதையினை பயன்படுத்துவதற்கு முன்பாக நீரில் ஊற வைக்க வேண்டும். பின், ஆளி விதையினை நாம் நன்றாக கொதிக்க வைத்து ஸ்பான்ச் போன்று மிருதுவான பிறகு சாப்பிடலாம். அதிக நேரம் ஊற வைக்கப்படுகிற ஆளி விதை தான் அதிக பயனை தரும். நமது உடலைப் பொறுத்தவரை நல்ல கொழுப்பு சத்து மற்றும் கெட்ட கொழுப்பு சத்து என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ஒமேகா-3 என்பது நல்ல கொழுப்பு சத்து வகைகளில் ஒன்றாகும்.
மேலும் நம் உடலுக்கு அடிப்படையான ஒன்றாகும். ஒமேகா 3 ஊட்டச்சத்து இருக்கக்கூடிய உணவு வகைகளில் ஆளி விதையும் ஒன்று. உங்களுக்கு நல்ல பலனைத் தரும். லிக்னன்ஸ் என்ற ஊட்டச்சத்தானது நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்க கூடியது. மேலும், ஆளி விதையில் மட்டுமே 75 முதல் 800 முறை உடலில் ஹார்மோனை சமப்படுத்த கூடிய ஆற்றல் இருக்கிறது. வேறு எந்த உணவிலும் இதுபோன்ற அளவிற்கு ஹார்மோனை சமப்படுத்தக்கூடிய ஆற்றல் இருக்காது.
நம் உடலில் மிக முக்கியமான ஊட்டச்சத்தாக கருதப்படும் நார்ச்சத்து,ஒன்பது மடங்கு அதிகமாக ஆளி விதையில் உள்ளது. இவை நம் உடலில் எடையை குறைக்க கூடிய பணியினை செய்வதுடன் செரிக்கும் தன்மையை நமக்கு அதிகப்படுத்துகிறது. தற்கால நவீன மருத்துவ ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கியமான ஆச்சரியத்தக்க ஒன்று என்னவென்றால் ஆளி விதை புற்று நோய்களுக்கு எதிரான கூறுகளைக் கொண்டுள்ளது. இதில் இருக்கும் ஒமேகா-3 போன்ற சத்துக்கள் புற்றுநோய்க்கு எதிரான பங்காற்றுகின்றன. குறிப்பாக, மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கு இவை பயன்படுகின்றன.
கனடா நாட்டிலிருந்து சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், தினமும் 30 கிராம் அளவு தொடர்ந்து ஆளி விதைகளை ஆறு மாதங்களுக்கு உண்பவர்களுக்கு ரத்த அழுத்தம் உருவாக்கக் கூடிய கூறுகள் மிகவும் குறைந்து காணப்படுகிறதாம். புரோட்டீன் அதிகம் கொண்ட ஆளி விதைகளில் அமினோ ஆசிட் மற்றும் கோலிக் ஆசிட் போன்றவையும் அதிகம் இருக்கின்றன. எனவே உடனே ஆளி விதையை வாங்கி சாப்பிட தொடங்குங்கள்.