Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநராக ஆசைப்படும் அண்ணாமலை…. திருவண்ணாமலை போங்க சித்தர் ஆகலாம்…. ஈவிகேஎஸ் இளங்கோவன்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் பொறுப்பு வாங்க துடிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் உளறிக் கொண்டு உள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எல். முருகனுக்கு பதவி கிடைத்தது போல தனக்கு பதவி பெறுவதற்கு அண்ணாமலை தினமும் திமுகவிற்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறார். அந்தமானில் கவர்னர் பொறுப்பு வாங்குவதற்கு அவர் துடிக்கிறார். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை.

அங்கு பல சித்தர்கள் இருக்கிறார்கள் அங்கே இவரும் ஒரு சித்தராக இருக்கலாம். தமிழக அரசியலை எளிதில் புரட்டி விடலாம் என அண்ணாமலை பேசி வருகிறார். 150 ஆண்டு கால அரசியலை பின்பற்றுகின்ற மாநிலம் தமிழ்நாடு. இங்கு மற்ற மாநிலங்களைப் போல மடத்தனமான மக்கள் இல்லை. விழிப்புணர்வோடு இருக்கின்றனர். அண்ணாமலையின் சத்தங்களுக்கு செவிசாய்த்து விரைவில் மோடி ஒரு அரசாங்க பதவியை கொடுப்பார் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |