தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என் ரவி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது தற்போது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தமிழக ஆளுநர் ரவி அவர்கள் பாஜக கட்சியின் முகவர் போல் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இவர் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா பற்றி பேசியது முதல் நடிகர் ரஜினிகாந்துடன் அரசியல் பேசியது வரை பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் அவர்கள் ஏதேனும் விசேஷ நாட்களில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட பல்வேறு விதமான அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்குவார். அந்த வகையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் தேநீர் விருந்து வழங்குவதாக அறிவித்தார். ஆனால் தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட பல்வேறு விதமான அரசியல் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது.
அதன்பிறகு நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகவும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்காமல் இருத்தல் உள்ளிட்ட மாநில அரசின் நலன்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார் எனவும் திமுகவினர் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து கவர்னர் கொடுக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வது தமிழக மக்களின் மனதை புண்படுத்துவது போன்றதாகும் என்றும், சட்டமன்றத்தின் மாண்பை குறைப்பது போன்றதாகும் என்றும் என்று கூறி திமுகவினர் புறக்கணித்தனர். இப்படி பகிரங்கமாக அறிவித்த திமுக அரசு, திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக மக்களின் மனது இப்போது புண்படாதா என்றும் அரசியல் வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளது.